“ உண்டி நான்கு விதத்தில் ஆறு அவைத்திறத்தில்
ஒப்பிலா அன்ப நாயகர் தொண்டர் இச் செயல்
அமுது செய்ய அளித்துள்ளார்”-சேக்கிழார்.
உணவு நான்கு வகைப்படும். அவை முறையே
1.உண்ணல்
2.திண்ணல்
3.நக்கல்
4.பருகல்
இதை ஆறு விதமாக சமைக்கலாம்.
1. இனிப்பு
2. உவர்ப்பு
3. கசப்பு
4. கார்ப்பு
5. துவர்ப்பு
6. புளிப்பு
வீட்டிற்கு வரும் விருந்தினர்க்கு உண்டில் நாளும் விதத்திலாறு மாக உணவு படைப்போமா………..
Monday, October 5, 2009
தமிழ் ஞான சம்பந்தர்.
திருமுறைகள் சைவ சமயத்தின் உயிர் மூச்சு.. அவை உன்னதமான மந்திரங்கள். பண்நெடுங் காலமாக தமிழே, தமிழன் வாழ்வில் கொலு வீற்றிருந்தது. காலப்போக்கில் தமிழர் தம் வாழ்வில் தமிழ் மெல்ல மெல்ல நகர்த்தப்பட்டு அந்நிய மொழிகள் ஆக்கிரமித்து அரசோச்சின.
ஏழாம் நூற்றாண்டில் நாடாளும் மன்னர்கள், சமஸ்கிருதம், பாலி போன்ற மொழிகளைக் கற்று அதிலேயே தம் திறமையைப் புலப்படுத்தினர். மகேந்திரவர்மன் சமஸ்கிருதத்தில் நாடக நூல் எழுதி, அதுவே பெருமை எனக் கருதினார். இசையும் வேற்று மொழிக்கு இடம் கொடுத்தது. திருக்கோவில் வழிபாட்டிலும் அந்நிய மொழி ஆதிக்கம் பெற்றது. தமிழர் வாழ்வியல் சடங்குகள் அனைத்திலும் வேற்று மொழி புகுந்தது.
இந்த இருண்ட சூழ்நிலையில் தான் ஞான சம்பந்தர் திரு அவதாரம் செய்தார். தமிழ்மொழி தனக்குறிய இடத்தைப் பெற போராடினார். தன்னை தமிழ் ஞான சம்பந்தர் என்றே சொல்லிக் கொண்டார்.
பின்னாள் வந்த சுந்தரரும்
“நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தன்” எனப்பாடினார்.

திருமுறைகள்
திருமுறைகள் தமிழர் தம் உயிர்மூச்சு
திருமுறைகள் என்பது தமிழ் வேதங்கள்
திருமுறைகள் என்றும் சமுதாய வழிகாட்டி
திருமுறைகள் என்பது பண்பாட்டுக் கருவூலம்
திருமுறைகள் என்பது இகபர நலன் தருவது
திருமுறைகள் என்பது முத்திப்பேறு அளிக்கவல்லது
வாழ்க தமிழ், வளர்க தமிழர், வளர்க திருமுறைகள்.
Subscribe to:
Comments (Atom)